திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி கூட்டம் கவரப்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி கூட்டம் கவரப்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆன டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார் .
கூட்டத்திற்கு மாவட்ட ஆவி தலைவர் பகலவன், மாவட்ட துணை செயலாளர்கள் எம்.எல்.ரவி, கதிரவன், மாவட்ட பொருளாளர் எஸ். ரமேஷ் , மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேசராணி தேசப்பன், திமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மணிபாலன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் ஒன்றிய செயலாளர் காளியம்பாக்கம் ஜெகதீசன் மூர்த்தி. நகர செயலாளர் முத்து கரிகாலன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஜெயலலிதா சசிதரன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மகளிர் ஆணைய தலைவரும் மகளிர் அணி மாநில இணை செயலாளருமான குமரி விஜயகுமாரி, மாநில பிரசார குழு தலைவர் சேலம் சுஜாதா ஆகியோர் பங்கேற்று திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ. கோவிந்தராஜன் பேசுகையில் மகளிர்க்கும், மாணவ மாணவிகளுக்கும் திமுக ஆட்சியில் செய்து வரும் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி திமுக மகளிர் அணி மகளிர் தொண்டர் அணியின் உறுப்பினர்களை தீவிரமாக சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன், திமுக மகளிர் அணி மாநில அணி செயலாளர் குமரி விஜயகுமாரி, திமுக மாநில அணி பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா வழங்கினார்கள்.கூட்ட முடிவில் மகளிர் அணி நிர்வாகி நளாயினி நன்றி கூறினார்.
No comments