திராவிட உருட்டு பொய் புரட்டுகளை தோலுரித்து காட்ட வேண்டும் - எச்.ராஜா
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இந்த நிதியும் ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பதில் அளித்துள்ளார் அதில், நான் என்ன சொல்றேன் நொண்டி குதிரைக்கு சறுக்கு நல்லது சாக்கு. அந்த மாதிரி இவர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு பல்வேறு திட்டங்களில் நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறார்கள். சென்ற பத்து ஆண்டுகளில் மட்டும் பலமுறை பிரதமர் அவர்களும், உள்துறை அமைச்சர் அவர்களும் பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தெந்த திட்டத்திற்கு என்னென்ன நிதிகள் வழங்கப்பட்டிருக்கிறது என்று. அதை மத்திய அரசு எல்லாம் மாநிலங்களுக்கும் கொடுத்திருக்கிறது. ஊடக நண்பர்கள் திராவிட உருட்டு பொய் புரட்டு ஆகியவற்றை தோலுரித்து காட்ட வேண்டும் என்பதற்காக நான் கேட்டுக்கொள்கிறேன்.
முதலில் 50 சதவீதம் நீங்கள் வாங்கிக் கொண்டீர்கள். மீதி உள்ள 50% த்தில் ஒரு ரூபாய்க்கு 71 பைசா உங்களுக்கு வந்து இருக்கு அத ஒழுங்கா செலவு பண்ணுங்க என்று அவர் பேசியுள்ளார்.
No comments