என்ன கடிச்சது இந்த பாம்பு தான்..... பாம்பை ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்த நபரால் பரபரப்பு.....
உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னைக் கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து கொண்டு வந்த நபரால் மருத்துவமனையில் பரபரப்பு உருவானது. அதாவது உத்திரபிரதேச மாநிலம், சம்பூர்ணா நகர் பகுதியில் ஹரிஷ்வரூப் மிஸ்ரா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தோட்டத்தில் வேலை செய்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது நாகப்பாம்பு ஒன்றை இவரை கடித்துள்ளது.
அந்த சமயம் சிறிதும் பயம் அடையாமல் கடித்த பாம்பை பிளாஸ்டிக் டப்பாவில் உயிருடன் பிடித்துள்ளார்.அதன் பின் அந்தப் பாம்பை அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்று தன்னை இந்த பாம்பு கடித்து விட்டதாகவும், தனக்கு சிகிச்சை கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியான மருத்துவர்கள் ஹரிவரூப் ன் தைரியத்தை பாராட்டினார்கள். இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஹரிஷ் பாம்பு தன்னை கடித்த இடத்தை சுட்டிக்காட்டி கடித்த உடனேயே நான் பாம்பை பிடித்து விட்டேன் என்று கூறினார். இதனை மருத்துவ நிர்வாகம் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இவரின் இந்த செயலால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments