• Breaking News

    அவதூறு பரப்பிய கல்லூரி மாணவரை பெருந்தன்மையாக மன்னித்துவிட்ட திருச்சி எஸ்பி வருண் குமார்

     


    திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ். இவருடைய மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருக்கிறார். இவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் சமீபகாலமாக அவதூறு கருத்துக்கள் பரவி வருவதால் எக்ஸ் பக்கத்திலிருந்து நானும் என் மனைவியும் தற்காலிகமாக விலகுவதாக வருண் குமார் அறிவித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அவதூறு பரப்பி வரும் நிலையில் அது தொடர்பாக 51 பேரின் லிஸ்ட்டை அவர் பட்டியலிட்டார். இது தொடர்பாக  விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான கல்லூரி மாணவர் ஒருவர் அவதூறு பரப்பியது தெரியவந்தது.

    இதனால் அந்த மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர் மற்றும் பெற்றோரை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தார். அதாவது உங்களுடைய சகோதரி மற்றும் தாய் பற்றி இப்படித்தான் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பவீர்களா என்று மாணவரிடம் எஸ்பி கேட்டார். இதைக் கேட்டவுடன் அந்த மாணவன் அவரிடம் உடனடியாக மன்னிப்பு கேட்டார்‌. இதைத்தொடர்ந்து மாணவரின் நலன் கருதி மன்னித்து ‌அங்கிருந்து அனுப்பி வைத்தார். மேலும் எஸ்.பி யின் இந்த செயலுக்கு அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    No comments