அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் விழா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் மற்றும் அரசு அறிஞர் அண்ணா மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் விழா அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களை அறந்தை ஃபிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் வெங்கட்குமார் வரவேற்றார் . மாவட்ட மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் தாய்ப்பால் கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு பிரசவ தாய்மார்களுக்கு ஏற்ப டுத்தப்பட்டது. மேலும் வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் குழந்தைகள் நல முதுநிலை மருத்துவர் ரவி, மகப்பேறு முதன்மை மருத்துவர் ரியாஸ் பாத்திமா, எலும்பியல் துறை மருத்துவர் ராதாகிருஷ்ணன், குழந்தைகள் நல மருத்துவர் இளையராஜா, சிவபாலசேகரன், அறந்தை ஃபிரண்ட்ஸ் ரோட்டரி கிளப்பின் பட்டய தலைவர் தங்கதுரை, மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், முன்னாள் தலைவர் முருகேசன், செயலாளர் சாத்தையா, ரஜினி கணேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் தாய்மார்களுக்கு மதர் ஹார்லிக்ஸ் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சுமார் 30 ஆயிரம் மதிப்பில் தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்டது. நிறைவாக சாத்தையா நன்றி கூறினார்.
No comments