• Breaking News

    நாகை: சத்துணவு ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை


     தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மைய முடிவின்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு, 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர் காலிப் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும், மாண்புமிகு முதலமைச்சர் தேர்தல் காலத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ( 30.8.2024 )  ஊழியர்கள் சந்திப்பு இயக்க நடத்தி  கோரிக்கை   ஊராட்சி ஒன்றிய ஆணையர்களிடத்தில் மனு அளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இயக்கத்திற்கு சங்க ஒன்றியத் தலைவர்  எஸ்.பிரேமா   தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கார்த்திகா கோரிக்கை விளக்க உரையாற்றினார்.  ஒன்றிய துணைத் தலைவர் எஸ்.சேகர்,   மாநில செயற்குழு உறுப்பினர் டி.சசிகலா,    மாவட்ட துணைத் தலைவர் சி.கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர்  சங்க மாவட்டச் செயலாளர்   அ.தி.அன்பழகன்  சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வெ.சித்ரா நிறைவுரை ஆற்றினார். இறுதியாக ஒன்றிய பொருளாளர் எம்.வாசுகி நன்றியுரையாற்றினார்.  பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

    மக்கள் நேரம் எடிட்.டர்

    ஜீ.சக்கரவர்த்தி

    விளம்பர தொடர்புக்கு 9788341834

    No comments