சீமானுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நோட்டீஸ்
தமிழ்நாட்டில் நிலவுகின்ற சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும், மின் கட்டண உயர்வு மற்றும் போதைப்பொருளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக அரசு, கூட்டணி போன்றவற்றை விமர்சித்தும் வயநாடு குறித்தும் பேசினார். தொடர்ந்து காவல்துறையை விமர்சித்து பேசினார்.
இந்நிலையில் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். போலீசார் குறித்து சீமான் பேசியதாவது;நான் யாரிடம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கே சிறுநீர் கழிக்கிறேன் என்பதை எல்லாம் நோட்டமிட்டு அதனை வெளியிடுவது தான் ஐபிஎஸ் படித்தவர்களுக்கு வேலையா? உன் வேலையா அது. எங்களது கட்சிக்குள் ஒருவரை பிசுரு என்போம். பின்னர், அவரையே உசுரு என்போம். இதில் உனக்கு என்ன வந்தது” என ஒருமையில் தரக்குறைவாக பேசி உள்ளார்.
இந்த வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், இதுகுறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், சீமானின்இது போன்ற தரக்குறைவான பேச்சை எல்லாம் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
No comments