தேனி: கம்பத்தில் மிஸ்டர் தேனி, மிஸ்டர் தமிழ்நாடு ஆகியவற்றுக்கான ஆணழகன் போட்டி ஏராளமானோர் பங்கேற்பு
தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று டைட்டில் பவர் ஜிம் மற்றும் தேனி டி எஃப் எப் சார்பாக ஆணழகன் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மிஸ்டர் தேனி, மிஸ்டர் தமிழ்நாடு, ஓவர் ஆல் சாம்பியன்ஷிப், உள்ளிட்டவற்றுக்கான போட்டியில் 50, 55,60,65,75 உள்ளிட்ட எடை வாரியாக இந்த போட்டியானது நடத்தப்பட்டது, இதில் தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடி பில்டர்ஸ் கலந்து கொண்டு தங்களது திறமைகளையும் உடற்கட்டமைப்புகளையும் வெளிப்படுத்தினார். இந்த ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள், ரொக்க பரிசு, டைட்டில், சர்டிபிகேட் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.
இளைஞர்கள் போதை வழியில் செல்லாமல் தங்களது உடல்நிலை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் உள்ளிட்டவைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த போட்டியானது நடத்தப்பட்டது என போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.இன்று நடைபெற்ற இந்த ஆணழகன் போட்டியினை ஏராளமானோர் கலந்துகொண்டு ரசித்துச் சென்றனர்.
No comments