ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கெளசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி - மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கெளசல் யோஜனா திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரையிலான இலவச திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கெளசல் யோஜனா திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரையிலான இலவச திறன் பயிற்சியினை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு தலைமையேற்று தொடங்கிவைத்தார்.
திட்ட அலுவலர் தில்லைமணி இளைஞர்களுக்காக வழங்கப்படும் இலவச திறன் பயிற்சிகள் குறித்தும், மகளிர் திட்டம் வாழ்வாதார இலவச சேவை எண் 155330 குறித்தும் விளக்கி கூறினார். பின்னர் பேசிய மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு தீன் தயாள் உபாத்யாய கிராமின் கெளசல் யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை இலவச திறன் பயிற்சியும் அதனை தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது எனவும்.சுய தொழில் செய்ய விருப்பம் உள்ள 18 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண் - பெண் இருவருக்கும் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்துடன் இணைந்து இலவச பயிற்சியும் அதனை தொடர்ந்து சுய தொழில் துவங்குவதற்கு மகளிர் திட்டத்தின் மூலமும் வங்கி மூலமும் நிதியுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும்.அதனடிப்படையில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 35 பெண்களை ஒன்றிணைந்து செயற்கை ஆபரண நகை தயாரிப்பு பயிற்சியானதும் வழங்கப்பட்டு வருகிறது என்றும் மாவட்ட மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு பெருமிதத்துடன் கூறினார்.
மேலும் இப்பயிற்சி துவக்க விழாவில் வாழ்வாதார திட்ட மாவட்ட வள பயிற்றுநர் - (பண்ணை சாரா) ராஜ்மோகன், பயிற்சி நிறுவனம் சார்பாக பயிற்றுநர்கள் முத்துகுமரேசன் மற்றும் வித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியினை வட்டார இயக்க மேலாளர் ஜெயந்தி,ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments