தாம்பரம்: பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா வழங்கினார்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலத்துக்குட்பட்ட, 63வது வார்டில் உள்ள சிஎஸ்ஐ கார்லி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
உடன் இருந்த மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதி குமார், கொடி தாமோதரன், சுரேஷ், தலைமை கழக பேச்சாளர் வேல்மணி திமுக நிர்வாகிகள் லோகநாதன், சீனிவாசகுமார், ரமேஷ்பாபு, பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டினல் கிரேஸ், மனோகர் தேவபுதிரன், ஜெகன்சிங் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments