சென்னை: ரயிலில் கடத்தப்பட்ட ஆட்டு இறைச்சி..... பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு ஜெய்ப்பூரில் இருந்து ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலில் 1600 கிலோ ஆட்டு இறைச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன்பின் அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த இறைச்சி 5 நாட்களுக்கு முன் வெட்டப்பட்டு, பதப்படுத்தப்பட்டு எடுத்து வந்ததாக கண்டுபிடித்தனர். அதன்பின் கால்நடை மருத்துவர் ஆய்வு நடத்திய பிறகு மாநகராட்சியிடம் அந்த ஆட்டு இறைச்சி ஒப்படைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து சிக்கந்தர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ரயிலில் 40 பெட்டிகளில் 1600 கிலோ ஆட்டிறைச்சி எடுத்துவரப்பட்டது என்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஷ் தெரிவித்தார்.
மேலும் 24 பெட்டிகளை நாங்கள் கைப்பற்றியுள்ளோம் அதற்குள் ரயில் சென்றுவிட்டது.மீதமுள்ள பெட்டிகளை அடுத்த ரயில் நிலையமான செங்கல்பட்டு, மதுரை போன்ற இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழு மூலம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments