கும்மிடிப்பூண்டி: எஸ்எஸ்சி என்ஜின் தொழிற்சாலை சார்பில் இரத்ததான முகாம்
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் எஸ்ஏசி என்ஜின் நிறுவனத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் 650 தொழிற்சாலை பணியாளர்கள் ரத்ததானம் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் எஸ்ஏசி எஞ்சின் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரத்ததான முகாம் நடைபெறும். இந்த ரத்த தான முகாமில் சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்ற ரத்ததானம் செய்வார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு எஸ் எஸ் சி என்ஜின் நிறுவனம், சென்னை தொழில் நகர ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய ரத்ததான முகாமிற்கு தொழிற்சாலை தலைமை பொது மேலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மனித வளத்துறை மேலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து இந்த முகாமில் அடையார் புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் இருந்து டாக்டர் சுனந்தா தலைமையில் 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினரும் ,விஎச்எஸ் மருத்துவமனையின் ரத்த வங்கியில் இருந்து டாக்டர் பாரதி தலைமையில் 24 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று ரத்ததான முகாமை வழி நடத்தினர்.
தொடர்ந்து இந்த முகாமில் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து 45பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 650 ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர்.
No comments