தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறிய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அடிக்கடி திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.அவர்கள் கொடுத்த தகவலின்படி மணிகண்டன் (28) என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்தான் இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது. அவரிடமிருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புடைய 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தன் காதலியின் நகைகள் அடகு வைத்த நகைகளை மீட்க திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இதுவரை 8 இருசக்கர வாகனங்களை திருடியதாகவும் அவர் கூறியுள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments