• Breaking News

    ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தீ விபத்து.... கடலில் மூழ்கிய விசைப் படகு.....


    குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி கிராமத்தை சேர்ந்த ராபிக்கு சொந்தமான விசைப்படகில் கேரள மாநிலம் மலப்பாய் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இதனால் அவர்களின் அலறல் சப்தம் கேட்டு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். தீப்பிடித்த படகில் இருந்த மீனவர்களை மீட்டு தங்களது படகுகளில் ஏற்றி, படகையும் கயிறு கட்டி கரைக்கு கொண்டு வர முயன்றனர்.

    அதற்குள் படகு முழுவதும் தீப்பிடித்து கடலில் மூழ்கியது. மின் பேட்டரியில் ஏற்பட்ட கசிவே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    No comments