• Breaking News

    நான் சினிமாவில் நீடிக்க இவர் தான் காரணம் - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

     


    விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். இவருடைய நடிப்புக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமை. தற்போது சினிமாவில் பிஸியாக இருந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தனது மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

    அதாவது வீடு வாங்கலாம் என சொல்லாமல் திரைப்பட தயாரிக்கலாம் என தனது மனைவி கூறுவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தனியார் டிவியின் விருது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், கொட்டுக்காளி போன்ற படங்களை தயாரிப்பது தனக்கு மனதிருப்தி தருவதாக கூறினார். தான் என்றோ சினிமாவை விட்டு போய் இருப்பேன் என்று கூறிய சிவகார்த்திகேயன் தான் சினிமாவில் நீடிக்க மனைவி தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

    No comments