கும்மிடிப்பூண்டி: பெண்ணிடம் நூதன முறையில் நான்கு சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் நூதன முறையில் நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கோமளா. இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவு மில்லுக்கு சென்ற போது தன்னைப்போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டு தங்க சங்கிலியை கழட்டி பரிசுக்குள் வைக்க சொல்லி இருக்கின்றார். பின்னர் 4 சவரன் தங்க சங்கிலியை வாங்கி காகிதத்தில் மடித்து பர்ஸில் வைத்துள்ளளார்.பின்னர் அந்த நபரும் அவருடன் வந்த இன்னொருவரும் மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் பறந்தனர். மாவு மில்லுக்கு சென்ற கோமளா பர்ஸில் உள்ள காகிதத்தை திறந்த போது அதில் ஒரு சிறிய கல் மட்டும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோமளா இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் என்று கூறி நகையை அபேஸ் செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments