மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை மாதர்பாக்கம் ஊராட்சியில் டி.ஜெ.கோவிந்தராஜ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
மக்களுடன் முதல்வர் மாதர்பாக்கம் மாநெநல்லூர் போந்தவாக்கம் பல்லவாடா சானாபுத்தூர் சூரப்பூண்டிப உள்பட ஆறு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்கும் விதத்தில் ஆயிரக்கணக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை டி.ஜெ கோவிந்தராஜ் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம் மாதர்பாக்கம் மாநெல்லூர் பல்லவாடா சாணபுத்தூர் சூரப்பூண்டி போந்தவாக்கம் நேமலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்கேற்ற மக்களுக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான டி.ஜெ கோவிந்தராஜன் துவக்கி வைத்து தீர்வு காணப்பட்ட மனுகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார் இதில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அரசு துறை சார்ந்த 17 துறைகள் சார்பான கோரிக்கை குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.இதில் சேர்மன் சிவகுமார், துணை சேர்மன் மாலதி குணசேகரன், மாதர்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் பல்லடம் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ்.பாதிரிவேடு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று பல்வேறு கோரிக்கை குறித்து மனு அளித்தார்.
No comments