• Breaking News

    பல கோடிக்கு அதிபதியான தூய்மை பணியாளர்..... சம்பாதித்தது எப்படி....?


    உத்தரபிரதேசம்: கோண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தூய்மை பணியாளர், தனது சொத்துக்களால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த நபர் சொகுசு வீடு, விலையுயர்ந்த கார்கள் உள்ளிட்ட பல சொத்துக்களை வைத்துள்ளார்.

    இந்த நபர் நகர கோட்டவாலியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். பின்னர் ஆணையர் அலுவலகத்தில் நஸீர் பதவிக்கு உயர்ந்தார். அங்கு பல ஆவணங்களை மறைத்து பணம் சம்பாதித்துள்ளார். இது குறித்து புகார் கிடைத்ததை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் இந்த நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவரது வங்கி கணக்குகள் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டது.விசாரணையில் அவர் 9 விலையுயர்ந்த கார்கள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது மனைவி மற்றும் சகோதரரும் விலையுயர்ந்த கார்கள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments