• Breaking News

    மதுரை: எம்எல்ஏ வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்

     


    மதுரை மூலக்கரை பகுதியில் உள்ள வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த தளபதி. இவருடைய வீட்டின் முன்பாக நேற்று திமுக கட்சியின் நிர்வாகி கணேசன் என்பவர் திடீரென கோஷமிட்டபடியே தீ குளித்தார். இவர் 90% காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் எதற்காக தீக்குளித்தார் என்ற காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு திமுகவினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments