டாக்டர் ஹெச்.வி.ஹண்டே நூல் வெளியீட்டு விழா..... அனைவரும் கலந்துகொள்ள அண்ணாமலை அழைப்பு.....
டாக்டர் ஹெச்.வி.ஹண்டே நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், முதுபெரும் மருத்துவரும், அரசியல் வித்தகரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, நாளை 27-08-2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குச் சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் (சத்யா ஸ்டுடியோ) நடைபெற இருக்கிறது.
Our Constitution என்ற ஆங்கில நூலையும், சட்ட மேதை அம்பேத்கர் என்ற தமிழ் நூலையும், வெளியிட இருக்கும் இந்த விழாவில், கல்வியாளர்கள், நீதி அரசர்கள், பத்திரிக்கையாளர்கள், அறிஞர் பெருமக்கள் என்று பலரும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
கண்முன் வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோரைக் கௌரவப்படுத்த நடத்தப்படும், அரசியல் சார்பற்ற இந்த விழாவில், டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள் மீது அன்பு கொண்ட அனைவரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments