தேனி மாவட்டம் கம்பம் அருகே உலக தாய்ப்பால் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் அரசு ஆரம்ப கள்ளர் பள்ளியில் உலக தாய்ப்பால் தினம் கை குழந்தைகள் உள்ள தாய்மார்களுடன் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதன் அவசியத்தை பற்றியும், குழந்தைகளின் ஆரோக்கியம் தாய்ப்பாலில் தான் உள்ளது, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பாலை முதன்மையானது மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் முறைகளைப் பற்றி வருகை புரிந்த மருத்துவர்கள் எடுத்துக் கூறினர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கம்பம் ஒன்றியம் சுருளிப்பட்டி ரா. அன்பு ராஜா வருகை புரிந்த குழந்தை பெற்ற தாய்மார்களை உபசரித்து நிகழ்வை துவக்கி வைத்தார்.பாலூட்டும் தாய்மார்களுக்கு காமய கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜுதீன் மகப்பெரு சஞ்சீவி பெட்டகம் வழங்கினார்.
மருத்துவர் பாரதி, ஆசிரியர் சுருளிப்பட்டி சிவாஜி, ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி, பெண் தொழில் முனைவோர் சிந்து, துணை சுகாதாரப் பணியாளர் ஜமுனா, ஆரோக்கிய அகம் தொடர்பு பணியாளர் இந்திராணி, ஊரக வாழ்வாதாரத்துறை சுகன்யா தேவி, சமூக நலத்துறை லதா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
வருகை புரிந்த அனைவருக்கும் காய்கறிகளில் உள்ள சத்துக்களைப் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. ஊட்டச்சத்து மிக்க நவதானிய உருண்டை, சுண்டல் பயிர், கேக் வழங்கி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் ஊட்டும் வாரமாக உலக தாய்ப்பால் தினமாக கடைப்பிடிப்போம்! நம் குழந்தைகளுக்கு நெஞ்சில்லா உணவாக தாய்ப்பால் வழங்குவோம்!என்று அனைத்து தாய்மார்கள் முன்னிலையிலும் விழிப்புணர்வாக எடுத்துக் கூறப்பட்டது.
No comments