அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார்

 


திருப்பத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் (58) மாரடைப்பால் இன்று காலமானார். உடல் நலம் பாதிப்பால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர் அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இவருடைய மறைவுக்கு இபிஎஸ் மற்றும் திமுக எம்எல்ஏ நல்லதம்பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments