கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் ராகுல் காந்தி பேச்சை கொச்சை ப்படுத்தி பேசிய பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கும்மிடிப் பூண்டியில் பொன்னேரி காங்கி ரஸ் எம்எல்ஏ துரை சந்திர சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
அதாவது பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளும ன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அவர்கள் ஜாதி வாரி கணக்கெடு ப்பு நடத்த வேண்டும் என குரல் கொடுத்ததை பாரதிய ஜனதா கட்சியினர் கொச்சைப்படுத்தி பேசியதை கண்டிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வ பெருந்தகை எம்எல்ஏ ஆணைப்படி திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் வழிகாட்டுதலின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் தலைமையில் ராகுல் காந்தி கொச்சைப்படுத்தி பேசிய தை கண்டித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத் தில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் இதில் கும்மிடிப்பூண்டி காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர், பிரேம்குமார், வழக்கறிஞர் சம்பத், சிவா ரெட்டி ,பெரியசாமி, மதன்மோகன்., திவான் ,மதன், ஜெய்சீலன் ,மகளிர் நிர்வாகிகள், லதா கலந்துகொண்டு கன்னடம் கோஷங்கள் எழுப்பினார்கள்.
No comments