ஊரப்பாக்கத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றி அறுசுவை சிக்கன் பிரியாணி வழங்கிய தேமுதிகவினர்
சென்னை அடுத்த ஊரப்பக்கத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஊரப்பாக்கம் எம்.ஜி.மூர்த்தி தலைமையில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக ஒன்றிய கழகச் செயலாளர் சக்திவேல் மற்றும் மதியழகன் கலந்து கொண்டு கழக கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து காரணை ரோடு, ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன், ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி ரோடு கேப்டன் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் அறுசுவை சிக்கன் பிரியாணி சுமார் 200 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தீனா, இந்திராஜ், விஜயலட்சுமி, உதயகுமார், ராஜி, செல்வம், அருண், சேகர், மனோ, சுந்தர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அறுசுவை பிரியாணி வழங்கினார்கள்.
No comments