கும்மிடிப்பூண்டியில் ரூ.98.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முழு நேராக நூலகத்தை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்
கும்மிடிப்பூண்டியில் 213 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட நூலகத்தின் திறப்பு விழா கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நூலக திறப்பு விழாவிற்கு கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், துணைத்தலைவர் கேசவன், திமுக மாவட்ட நிர்வாகி எஸ்.ரமேஷ், ஒன்றிய செயலாளர் மணிபாலன், நூலக குழு உறுப்பினர்கள் பிரேம் குமார், வழக்கறிஞர் வேலு, பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.கே. மாரிமுத்து , பேராசிரியர் விஜயரங்கன், தொழிலதிபர் கோ.மா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஜெய் நாராயணன், டி.சி.மஸ்தான், டி.சி.மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நூலகத்தை திறந்து வைத்து நூலகத்தை பார்வையிட்ட கும்மிடிப்பூண்டி எம் எல் ஏ டி.ஜெ கோவிந்தராஜன் , நூலகர் தேவி, பெனிக் பாண்டியன் மற்றும் வாசகர் வட்டத்தினரை பாராட்டினார்.கும்மிடிப்பூண்டியில் பாழடைந்த நிலையில் இருந்த நூலகம் இடிக்கப்பட்டு புதிதாக நூலகம் கட்டித் திறக்கப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதி மக்களை மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் ராஜேஷ்குமார், கன்னிமாரா நூலக ர்கள் உமாராணி, குமார், நூலகர்கள் சங்கர், ஜோதீபாபு, ஞானபிரகாசம், தியாகராஜன், சுரேஷ்பாபு, சுஜாதா, பேனிக் பாண்டியன், ரமணி, ராமு, தரணி, சங்கீதா, உமாராணி, யுவராணி, ரேகா, ஜுவா, அமுதா, சத்யபாமா முன் நின்று சிறப்பாக நடத்தினர்.
No comments