இல்லத்தரசிகளுக்கு இன்று காலை 9.30 மணிக்கு வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.1000......
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 12வது தவணை ஆகஸ்ட் 15 இன்று வரவு வைக்கப்படுகிறது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு தமிழக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிலையில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பன்னிரண்டாவது தவணை இன்று காலை 9.30 மணி அளவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. 78வது சுதந்திர தினத்தன்று இந்த தொகை கிடைக்க உள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி என பெண்கள் கூறி வருகிறார்கள்.
No comments