முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 80வது பிறந்தநாள் விழா.... வடமாநில கட்டுமான பணியாளர்களின் நிறை, குறைகளை கேட்டறிந்தார் மாநில தலைவர் செல்வபெருந்தகை
சென்னை அடுத்த தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவரும், பிரதமருமான ராஜிவ் காந்தி அவர்களின் 80வது பிறந்தநாள் விழா நான்குநெரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்டு கட்டுமான பணியில் ஈடுபடும் வடமாநிலத்தவர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது வடமாநிலத்தவர்கள் எங்களுக்கு ரேஷன் கார்டு வேண்டும் எனவும், நாங்கள் ஊருக்கு செல்ல இருக்கைகள் கிடைப்பதில்லை இதற்கு உங்களுக்கு ரயில்வே துறையிடம் பேசி தனி இருக்கை பெட்டிகள் ஏற்பாடு செய்வதாக செல்வ பெருந்தகை உறுதி அளித்தார்.
மேலும் வடமாநில குழந்தைகளை பள்ளிக்கு சேர்பது சிரமாக உள்ளது எனவும் பல்வேறு குறைபாடுகளை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கினார்கள். அப்போது அவர்களுடன் உணவருந்தி மகிழ்ந்தார் செல்வ பெருந்தகை.
இதில் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரின்ஸ் தேவசகாயம், மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார், மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன், நகர் தலைவர்கள் விஜய் ஆனந்த், தீனதயாளன், ஏ.கே.செல்வம் உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments