80 வயது மூதாட்டியை மதுபோதையில் அடித்து கொலை செய்த ஜாமீனில் வந்த குற்றவாளி
சென்னை வியாசர்பாடியில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த 15 நாட்களில் 80 வயது மூதாட்டியை மதுபோதையில் அடித்து கொலை செய்த வழக்கில் ரவுடி முரளி என்பவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் விசாரணையில் ரவுடி முரளி கிருஷ்ணன் கஞ்சா போதைக்கு அடிமையாகி தினமும் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அவருடைய மனைவி பிரிந்து சென்றதாகவும் குற்ற வழக்குகளில் கைதாகி கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்ததும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் 80 வயது மூதாட்டியை மதுபோதையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
No comments