கும்மிடிப்பூண்டியில் அனைத்து அரசு அலுவலகங்கள், நீதிமன்றத்தில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், அமிழ்தமன்னன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரோஜா ரமேஷ்குமார். ரவக்கிளி ரமேஷ்குமார். ரவிக்குமார், ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தேசிய கொடியேற்றி பள்ளி மாணவர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன், எஸ்.டி.டி.ரவி, குப்பன், நஸ்ரத் இஸ்மாயில், முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.என்.பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
அவ்வாறே கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சரவணகுமாரி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவர்களும் பங்கேற்றனர்.
மேலும் கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.பி.திலீப்பாபு பங்கேற்று நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
No comments