• Breaking News

    ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா

     


    உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹளதியா கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் ஹாஜி. எம். தர்வேஷ் முகைதீன், ஆட்சிமன்ற குழு தலைவர் ஹாஜி .எஸ். முகமது மீரான் தலைமை தாங்கினர்.

     கல்லூரியின் முதல்வர் ஹாஜி. முனைவர். ஹச். முகமது மீரான் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின். முன்னதாக என்.சி.சி தரைப்படை திட்ட அலுவலரும் தமிழ்த் தறைப் பேராசிரியருமான முனைவர். எம். அப்துல் காதர் வரவேற்றார். இக்கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் பேராசிரியர் மற்றும் வணிகவியல் துறைத் தலைவருமான முனைவர் எ. அப்பாஸ் மந்திரி தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். கொடியேற்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர். பி. அக்பர் அலி செய்திருந்தார்.

     இவ்விழாவில் கல்லூரி ஆட்சிமன்ற குழு  உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், பேராசிரியர்கள், என்.சி.சி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், அலுவலக கண்காணிப்பாளர், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.. நிகழ்வின் இறுதியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் எ. எம் ரஷீதா பானு நன்றியுரையாற்றினார்.

    No comments