• Breaking News

    நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 750 மாணவிகளுக்கு இலவச சைக்கிள். வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார்

     

    கூடுவாஞ்சேரி,நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள 750 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், 21வது வார்டு கவுன்சிலர் ஜெயந்திஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீவித்யா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசுதனன் கலந்துகொண்டு 750 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமுஜிஜேந்திரன், நந்திவரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் பெண்கள் மேல்நிலை பள்ளி துணை தலைமை ஆசிரியை பவித்தா நன்றி கூறினார்.

    No comments