சிட்டியில் பைக்குகளை திருடி கிராமத்தில் விற்ற 60 வயது தாத்தா
தாம்பரம் மாநகர காவல் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இருசக்கர வாகன திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 60 வயதான ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரிஹரன், திருடிய இருசக்கர வாகனங்களை வந்தவாசி கிராமப்பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதான ஒருவர் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியளிக்கிறது. போலீசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments