• Breaking News

    லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள்.... மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு..... பிரதமர் மோடி வாழ்த்து....


     கடந்த 2019 ஆம் ஆண்டு  ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. கூடவே ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரு வேறு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. அதில் லடாக் யூனியன் பிரதேசத்தில் இதுவரை இரண்டு மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.இந்நிலையில் லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில். “லடாக்கில் ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சங்தங் ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களிடம் எளிதில் சென்றுசேரும்.. வளர்ச்சியடைந்த, வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பார்வையை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சங்தங் ஆகியவை  அதிக கவனம் பெறும். இதன் மூலம்  சேவைகள் மற்றும் வாய்ப்புகளை மக்களுக்கு  சென்று சேரும்.  லடாக் மக்களுக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    No comments