ரூ.525 கோடி மோசடி வழக்கு.... வின் தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்ந்து நிதி நிறுவனத்திற்கும் சீல்
இந்திய மக்கள் கல்வி இயக்கத்தின் தலைவரும் பாஜக வேட்பாளருமான தேவநாதன் யாதவ் மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 525 கோடி பண மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அவருக்கு சொந்தமான இடங்களில் குற்ற பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனையில் அவருடைய அலுவலகத்தில் 4 லட்சம் ரொக்கம், 2 ஏடிஎம் கார்டுகள், ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு சொந்தமான வின் டிவிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாப்பூர் தனியார் நிதி நிறுவனத்திற்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments