பல பெண்களுடன் உல்லாசம்..... 50 ஆபாச வீடியோ.....வசமாக சிக்கிய சாமியார்


 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒருவர் வசித்து வருகிறார். டிரைவரான அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். அவர்களது வீட்டிற்கு அருகில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் சேலம் போயர் தெருவில் வசிக்கும் முத்தையன் என்பவர் அடிக்கடி அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு செல்வார்.

மேலும் பில்லி சூனியம் எடுப்பது, பெண்களை வசீகரம் செய்வது உள்ளிட்ட வேலைகளையும் முத்தையன் சாமியார் வேடம் அணிந்து செய்து வந்ததாக தெரிகிறது. டிரைவருக்கும் முத்தையனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் பண நெருக்கடி ஏற்பட்டதால் டிரைவர் தனது 50 சென்ட் நிலத்தை 4 லட்ச ரூபாயை பணத்திற்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். நாளடைவில் டிரைவரின் மனைவிக்கும் முத்தையனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது.

இதனை அறிந்த டிரைவர் முத்தையன் மற்றும் தனது மனைவியை அழைத்து எச்சரித்துள்ளார். மேலும் டிரைவர் முத்தையனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்தி நிலத்தை மீட்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் முத்தையனுக்கும் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முத்தையன் நிலத்தை திருப்பி கேட்டால் உனது மனைவியுடன் நான் ஆபாசமாக இருந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பரப்புவேன் என மிரட்டி உள்ளார்.

இது குறித்து டிரைவர் சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்தி விசாரணையில் தகவல்கள் தெரியவந்துள்ளது அதாவது முத்தையன் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் முத்தையனின் மடிக்கணினியில் இருந்துள்ளது. இதனால் மடிக்கணினி, 5 செல்போன்கள், ஐந்து பென்டிரைவ் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முத்தையனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Post a Comment

0 Comments