கும்மிடிப்பூண்டியில் மறைந்த தேமுதிக தலைவர் லிஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழாவை கும்மிடிப்பூண்டியில் தேமுதிகவினர் கொண்டாடினர்.மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டியில் தேமுதிக ஒன்றிய, நகர நிர்வாகிகளால் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எம்.டில்லி தலைமை தாங்கினார். இந்த விழாவிற்கு அவை தலைவர் கே.ஜி.பாபுராவ், மாவட்ட பொருளாளர் எஸ்.பி.டி.ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராம்குமார், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சோனியா பாபு, மாவட்ட மீனவர் அணி நிர்வாகிகள் சாமுவேல். மூர்த்தி, கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் ஜெயவேலு, கிழக்கு ஒன்றி செயலாளர் ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த தேமுதிக மாவட் செயலாளர் கே.எம்.டில்லி. பின் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு தேமுதி்கவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் கேவ் வெட்டி பொதமக்களுக்கு வழங்கப்பட்டதோடு, 500பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் கேப்டன் சங்கர், சிலம்பரசன் வெங்கடேசன்.மற்றும் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments