• Breaking News

    மதுரை – ராமநாதபுரம் பாசஞ்சர் ரயில் 5 நாட்களுக்கு ரத்து

     

    மதுரை கோட்டத்தில் நடைபெற உள்ள தொழில்நுட்ப பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுவதால் ஐந்து நாட்களுக்கு மதுரை மற்றும் ராமநாதபுரம் இடையேயான பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    குருவாயூர் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நான்கு நாட்களுக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் செல்லாமல் மானாமதுரை மற்றும் காரைக்குடி புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்தடையும் எனவும் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் ஆகஸ்டு எட்டாம் தேதி திண்டுக்கல் மற்றும் மதுரை செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மற்றும் காரைக்குடி DEMU ரயில் காலை 10.15 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    No comments