தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கேன்சர் பாதிப்பு அதிகம்..... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 18 வயது நிரம்பிய அனைவரும் கண்டிப்பாக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளார்.
இந்த தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது, உலகம் முழுவதும் கேன்சர் பாதிப்பு என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.தமிழகத்தைப் பொறுத்தவரை ராணிப்பேட்டை, கன்னியாகுமரி (நாகர்கோவில்), திருப்பத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கேன்சர் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது.
இந்த மாவட்டங்களில் கடந்த வருடம் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இந்த வருடம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆரம்ப காலத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் அவர்களை 100% காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
No comments