சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3 புள்ளி 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஃபாா்முலா 4 காா் பந்தயம் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஃபார்முலா 4 காா் பந்தயம் நடத்த எதிா்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பாலாஜி அமா்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, நீதிமன்ற உத்தரப்படி, 7 நிபந்தனைகளுடன், அதாவது “போக்குவரத்து மாற்றம் செய்யப்படும், “மருத்துவமனை செல்வோருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது” என தமிழ்நாடு அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து “FIA சர்வதேச அமைப்பு அனுமதி வழங்கும் பட்சத்தில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தலாம்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments