இட நெருக்கடி...... புழல் சிறையில் இருந்து 41 கைதிகள் செங்கல்பட்டு கிளை சிறைக்கு இடமாற்றம்
சென்னை அருகே புழலில் 77 ஏக்கர் பரப்பளவில் சிறை உள்ளது. இந்த வளாகத்தில் இருக்கும் 3 சிறைகளில், விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் புழல்-2 சிறையில் 1,250 கைதிகளை மட்டும் அடைக்கும் கட்டமைப்பு வசதி உள்ளது. ஆனால் இந்த சிறையில் எண்ணிக்கையை விட அதிக கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனா். இதனால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புழல் -2 சிறையில் இருந்த தண்டனைக் கைதிகளில் 41 கைதிகளை செங்கல்பட்டில் உள்ள கிளை சிறைக்கு சிறைத்துறையினா் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்தனா்.
No comments