400 கடன், வேலைவாய்ப்பு செயலிகளுக்கு தடை....
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசு இதனை தடுக்க பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பயனாளர்களை துன்புறுத்தியதற்காகவும் நிதி மோசடியில் ஈடுபட்ட காரணத்திற்காகவும் சுமார் 400 ஆன்லைன் கடன் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவன செயலிகளை கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தடை செய்துள்ளது. இந்த செயலிகள் தமிழ்நாடு, உத்திரபிரதேசம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 17 மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் 30 முதல் 40 சீன நிறுவனங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 600 செயலிகள் சோதிக்கப்பட்டுள்ளன.
No comments