ரெட்டியின் ஆட்சியில் ரூ.3.6 கோடிக்கு 'முட்டை பப்ஸ் ஊழல்'..... நாயுடு கட்சி புகார்.....
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் அலுவலகத்திற்கு ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டதாகவும், அது தொடர்பான பில்களின் புகைப்படங்கள் வைரலானது. இதனை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினர் பரப்பி வருகின்றனர். ஆனால், ஜெகன்மோகன் கட்சி, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றார்.
அப்போது முதல், ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது.முதல்வராக இருந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக ரிஷிகொண்டாவில் அரண்மனை போன்ற ஒரு கட்டடம் கட்டியது, அவரது குடும்பத்தினருக்கு அதிக அளவு பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்புவது, அவர்கள் விரைவாக பயணம் செய்வதற்கு சிறப்பு விமானங்கள், விடுமுறைகளை கொண்டாடுவதற்கு ஹெலிகாப்டர்கள் என அரசு பணத்தை பயன்படுத்தியதாக என ஜெகன்மோகனுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் வரிசையாக புகார்களை வெளிக்கொண்டு வந்தனர்.
அந்த வகையில் இப்போது 'முட்டை பப்ஸ் ஊழல்' என்ற ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.ஜெகன்மோகன் முதல்வராக இருந்த 2019 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் அவரது முதல்வர் அலுவலகத்திற்கு ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆண்டுக்கு சராசரியாக ரூ.72 லட்சத்திற்கு முட்டை பப்ஸ்க்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது.
No comments