கம்பம் யாதவர் சமுதாயம் சார்பில் கடந்த 2 நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது
தேனி மாவட்டம்,கம்பம் யாதவர் சமுதாயம் சார்பில் கடந்த 2 நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது . நேற்று முன்தினம் வேணுகோபால கிருஷ்ணன் மற்றும் யது குல வல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டன. 2ம் நாளான நேற்று காலை ஸ்ரீ கம்பராயர் பெருமாள் உற்ச்சவக்கு திருமஞ்சனமும், கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .
மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கருடாழ்வார் வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளான போக்குவரத்து சிக்கனல், காந்தி சிலை, தியாகி வெங்காடச்சலம் தெரு, பார்க் ரோடு, வேலப்பர் கோவில் வழியாக உலா வந்தார். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் வேலப்பர் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
இதற்காக 30 அடி உயரமுள்ள வழுக்கு மரம் வைக்கப்பட்டிருந்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு கம்பம் மாலையம்மாள் புரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஹர்சன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அவருக்கு யாதவர் சமுதாயம் சார்பில் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டன.இதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று கம்பராயப் பெருமாள் கோவிலில் திருவிழா நிறைவடைந்தது. இதில் இளைஞர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
No comments