• Breaking News

    தாம்பரம் தெற்கு பகுதி தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த பிறந்தநாளை முன்னிட்டு 25 இடங்களில் கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தெற்கு பகுதி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் தெற்கு  பகுதி கழக செயலாளர் கேட் தர்மா  தலைமையில் வட்ட செயலாளர்கள் ராசி மகேந்திரன், எம்.இளங்கோ, கே.குமார், கண்ணியப்பன் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர்  ஏற்பாட்டில் 5 வார்டுகளிலும் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. தாம்பரம் மாநகராட்சி 61வதுவார்டு, 62வது வார்டு, 63வார்டு, 64 வார்டு, 47வது வார்டு ஆகிய 5 வட்டங்களிலும் சுமார் 30 இடங்களில் தேமுதிக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

     அதனை தொடர்ந்து 63-வது வார்டு சார்பில் எம்.இ.எஸ். சாலையில்  கேப்டன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் செங்கப்பட்டு மாவட்ட துணை செயலாளர் செழியன், மாநில பொதுக்குழு சரவணன், பகுதி செயலாளர் கேட் தர்மா ஆகியோர் கலந்து கொண்டு கேப்டன் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதனை ரொடர்ந்து பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள்  தேன், பாபு, வி.எஸ்.லோகாநதன், ஐ.கே.தர்மா, டி.எழுமலை, பாத்திமா, நந்தினி, சுஜாதா நந்தினி, பாலமுருகன், தமிழரசி, வாசு, பூபதி, நெரும்பூர் ராஜேந்திரன், சுமதி, எம்.திலகா, அபிநய்யா, ரம்யா, எழுமலை, அசோக்குமார், சரிதா, விஜயன், முருகன், என்.கார்த்தி, எம்.கார்த்தி, குமரேசன், பிரகலாதன், ரவி, நாகூர் மீரான், ரகுதிபதி, அஜித்குமார், பத்மாவதி, அஸ்வதி, முத்து லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    No comments