சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் சத்தி ஆனை கொம்பு அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவர் எஸ்.என்.ஜவஹர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க செயலாளர் எஸ்.ஏ.சேவியர் அறிக்கை தாக்கல் செய்தார். சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க பொருளாளர் ச.கி.நாகராஜ் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மேலும் இக்கூட்டத்தில் துணை தலைவர் எஸ்.ஏ.ஜாகீர்உசேன், துணை செயலாளர்கள் எஸ்.ராம்குமார், கே.சசிக்குமார், எஸ்.சதிஸ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர் கலந்துகொண்டனர்.
No comments