திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார். இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உட்பட 22 பேர் மீது தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதாவது விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பாடியதாக கூறி சாட்டை துரைமுருகன் திருச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் வருண் குமார் ஐபிஎஸ் பற்றி அவதூறாக பேசியிருந்தார்.
அதைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோரும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தற்போது 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களில் மதுரையைச் சேர்ந்த திருப்பதி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
0 Comments