இன்றைய ராசிபலன் 18-08-2024
மேஷம் ராசிபலன்
அச்சச்சோ, அந்த காதல் உணர்வுகள் உங்களைச் சித்திரவதை செய்யும்! உங்களுக்கு உண்டான பிரச்சினைகளிலிருந்து ஒரு நபர் உங்களைக் காப்பாற்றுவார் என்றும் தெரிந்தால், உங்கள் மனம் அதற்கேற்ப வேகமாக இயங்க தொடங்கும். உங்களைப் போலவே உங்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு நேரம் கொடுங்கள், மேலும், அவருக்கான இரண்டாவது வாய்ப்பை வழங்க வேண்டும். இதை அவசரமாகச் செய்வதற்குப் பதிலாக, பொறுமையாக இருக்க வேண்டும்.
ரிஷபம் ராசிபலன்
உங்கள் கடின உழைப்பு மற்றவர்களுக்கும்தெரியத்தொடங்கியுள்ளது. இது கண்டிப்பாக நல்லபலனைக்கொடுக்கும். வாழ்க்கை நீங்கள் நினைத்ததைவிடச்சிறந்தது என்று நீங்கள் உணர்கிறீர்கள். நீங்களே மிகவும் கடினமாக நபராக இருக்காதீர்கள். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். பல விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றன. இன்று, நீங்கள் சிறந்த புத்திசாலி போன்று செயல்படுவீர்கள். அதைஉங்களுக்குச்சாதகமாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு விருந்து தயாராக உள்ளது, எனவே அதற்குச் செல்லுங்கள்.
மிதுனம் ராசிபலன்
இன்று உங்கள் மனதில் தீர்வு காணப்படாத பல விஷயங்கள், மனத்தெளிவின்மையை ஏற்படுத்தும். உங்கள் மனதில் தெளிவாகத் தெரியும் விஷயங்கள் உங்களுக்கு நல்லவையாகவே இருக்கும். நீங்கள் குழந்தையாக இருந்த போது, உங்களுக்காக யாரால் முடிவெடுக்க முடியும் என்று நீங்கள் விரும்பினீர்களோ, அதே போன்று இப்போதும் உங்களுக்காக யாராவது முடிவெடுக்க மாட்டார்களா என விரும்புகிறீர்கள். ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாள வேண்டியிருப்பதால், நீங்கள் மெதுவாகச் செயல்படுங்கள். பல்வேறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் கலையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், அது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்க செய்யகூடாது.
கடகம் ராசிபலன்
உடல்நலம் குறித்த பிரச்சினைகள் உங்களை பலவீனப்படுத்திவிடுகிறது. உங்கள் உடல்நிலை குறித்து நிபுணரது கருத்தைப் பெற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இன்று, விஷயங்கள் கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக இருக்கின்றன. உங்களுக்கே ஆச்சரியம் அளிக்கும் விதத்தில், விஷயங்கள் கச்சிதமாக பொருந்தக்கூடியதாகத் தோன்றும். உங்களது அன்பிற்கினிய பழைய நண்பருடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது, உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சில அற்பத்தனமான செயல்களால் உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நபர்கள் இருக்கலாம். அவர்களை விலக்கி வைத்து, எல்லா சிக்கல்களிலிருந்தும் விடுபட நீங்கள் விரும்பக்கூடும்
சிம்மம் ராசிபலன்
எதையும் பட்டென பேசும் தன்மை கடந்த காலங்களில் உங்களைச் சிக்கலில் ஆழ்த்தி இருக்கலாம். உங்கள் சிந்தனையற்ற தன்மை உங்களைப் பற்றி அக்கறை கொண்டவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் செயல்களைப் போலவே உங்கள் வார்த்தைகளுக்கும் நீங்கள் பொறுப்பு. நீங்கள் ஏற்கனவே உடைந்து விடும் நிலையில் இருக்கிறீர்கள், மேலும் அதிகரித்து வரும் மன அழுத்தம் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது. நீங்கள் யார் மீதாவது நம்பிக்கை வைக்க வேண்டும் அல்லது உங்கள் மனதை எளிதாக்க உதவும் சில செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
கன்னி ராசிபலன்
அமைதியாக அமர்ந்து கொண்டு மூச்சை இழுத்து விடுங்கள். கோபம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவும், உடனடி வெளிப்பாடாகவும் இருப்பதுஉங்களுக்குத்தெரியும்.உங்கள் மனநிலையை அடக்கி ஆளாமல் விட்டு விட்டால், அது உங்கள் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து வகையான மனக்கசப்பையும், அதிருப்தியையும் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.உங்களைப்பாதிக்கும்பிரச்சினைகளைக்கண்டறியவும். இன்று, உங்கள் நண்பரிடமிருந்தோ அல்லது உங்களுடைய சரியானகூட்டாளரிடமிருந்தோநீங்கள் ஆறுதலையும் தீர்வுகளையும் பெறுவீர்கள். கோபத்தினால் நீங்கள் செய்யும் தவறுகளை எவ்வாறு தடுப்பது என்று, உங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடிய நபர்களிடமிருந்துபதிலைப்பெற்றுக் கொள்ளுங்கள்.
துலாம் ராசிபலன்
உங்களது கோபம் உங்களை தோற்கடித்து விடுகிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் சில சிக்கலான நபர்களை சந்திக்கிறீர்கள். அவர்களின் ஒருசில தந்திரங்கள் உங்களை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டது. இந்த சூழலில், ஒரு பொறுப்பான தெரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பொறுமையை ஒருபோதும் இழக்காதீர்கள். மற்றவர்களை ஏமாற்றும் விஷயங்களை செய்யவேண்டாம். நீங்கள் நிறைய விஷயங்களை செய்து முடிக்கவில்லை என்பதைக் பொருட்படுத்தாமல், விஷயங்களைச் சிறப்பாகச் செய்வதில் மட்டுமே உங்கள் நேரத்தையும், சக்தியையும் மையமாகக் கொள்ளுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
சில உறவுகளை சிறந்தவையாக மாற்ற அதிக சிரத்தை தேவைப்படுகிறது. அதை முதலில் நினைவிற் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் நடந்த வேதனையான விஷயங்களை மறக்க விரும்புகிறீர்களா? நீங்கள் அதை ஏன் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. நண்பா! நீ ஒரு உண்மையான போர்வீரன். அனைத்தும் விரைவில் சிறப்பாக அமையும். சற்று பொறுத்திரு. பல விஷயங்கள் உங்கள் நம்பிக்கையை குறைத்து, ஓர் பாதுகாப்பற்ற தன்மையை உங்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளன. உங்களை நீங்களே நம்பிய அந்த நிலைக்கு இப்போது என்னவாயிற்று? இதற்குரிய பதில் உங்களிடம் தான் உள்ளது. இன்றே நீங்கள் அதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
தனுசு ராசிபலன்
உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் நேர்த்தியாக உள்ளன. விட்டுவிடமுடியாத ஒரு மோசமான பழக்கத்தைத் விட்டொழிக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்க, இது ஒரு சிறந்த தருணமாகும். உங்களது வாழ்க்கையில் பிரவேசிக்க, ஒரு அந்நியர் முயற்சிக்கிறார். இந்த நேரத்தில், அவரின் எல்லா நாடகங்களையும் சமாளிக்க உங்களுக்கு நேரமும், சக்தியும் இருகிறதா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பகல் கனவு காண்பது என்பது பின்னாளில் உங்களது நேரத்தை வீணடித்து விட்டது. இந்த அங்கலாய்ப்பான நிலையை நீங்கள் மாற்றிவிட்டு, உங்களது கனவுகளை அடைய பணி செய்யுங்கள்.
மகரம் ராசிபலன்
இன்று நீங்கள் பேசும் வார்த்தைகளில் கனிவாகப் பேசுங்கள். உங்கள் கனிவான வார்த்தைகள் நீங்கள் விரும்பும் நபருக்கு ஆறுதலைத் தரும். இதனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் மறைந்து விடும். மேலும், மக்கள் உங்களை புதிய மரியாதையுடன் பார்ப்பார்கள். நீங்கள் ரகசியங்களைப் பாதுகாப்பதில் வல்லவர். ஆனால், அதே போன்று உங்களைச் சுற்றியுள்ளவர்களும் இருக்க வேண்டும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி நீங்கள் நினைத்தால், அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
கும்பம் ராசிபலன்
உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் மண்டலத்தின் எல்லையிலிருந்து வெளியேறுவதற்கு சற்று குழப்பமாக இருக்கும் போது, இந்த மாற்றம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்களுக்கு பயனளிக்கும். சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், இதுபோன்ற மாற்றங்கள் உங்களுக்கு உதவும் என்று நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் மற்றவர்கள் மீது கடுகடுக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் உணர்கிறீர்கள். இது உங்களது அன்புக்குரியவர்களிடமிருந்து கூட, உங்களைத் துன்புறுத்துகிறது. உங்கள் பயத்தை ஓரம்கட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதை எதிர்கொள்வதை பற்றி கவலைப்பட வேண்டாம். மேலும், இன்று உங்கள் மென்மையான குணங்களை அவர்களுக்கு வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்.
மீனம் ராசிபலன்
சில நாட்களாக உங்கள் மனதில் அதிருப்தி எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று, அந்த எண்ண ஓட்டங்கள் நின்றுவிடும். உங்கள் விலைமதிப்பற்ற வாழ்க்கையிலிருந்து, கடந்த கால நினைவுகளை வெட்டி விட்டு, பலனளிக்கும் பயணத்தைத் தொடங்குங்கள். ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. எனவே, அவற்றை விட்டு விட முடியாது. இதுபோன்ற மகிழ்ச்சியான இந்த பயணத்தில், காதல் மலர்கிறது. இந்த மாற்றம், பதற்றம் நிறைந்ததாக இருந்தாலும், அது மதிப்புக்குரியது என்பதைக் கவனித்து, மாற்றம் குறித்து விவாதித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
No comments