அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் 17 ம் தேதி மின்நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம்,நாகுடி, கொடிக்குளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி, அறந்தாங்கி, அழியாநிலை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி, அம்பலவானேந்தல், ஆவுடையார்கோவில், நாகுடி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், ஏம்பல், வல்லவாரி, அறந்தாங்கி, ஆளப்பிறந்தான், கம்மங்காடு, துரையரசபுரம், ஆகிய பகுதிகளில் வரும் 17ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும், இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது" என்றும் அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். கீரமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை துணை மின் நிலையங்களில் மின்நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. எனவே இந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்கும்.
No comments