ஓட்டேரி அரசு மேல்நிலை பள்ளியில் 144 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் ஊராட்சியில் ஓட்டேரியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார், துணை தலைவர் கவிதாசத்யநாராயணன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஆகியோர் கலந்து கொண்டு 144 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் திமுக பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments