• Breaking News

    ஆட்சியை கவிழ்க்க ரூ.100 கோடி..... தயாராகும் 'ஆபரேஷன் தாமரை'..... கர்நாடக அரசியலில் பரபரப்பு

     

    கர்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ஜ., ரூ.100 கோடி வழங்க தயாராகி இருப்பதாக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.எங்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ஜ., ரூ.100 கோடி வழங்குவதாக எம்.எல்.ஏ., ரவிக்குமார் கவுடா என்னிடம் தெரிவித்தார்.

     'ஆபரேஷன் தாமரை' மூலம்தான் கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ஒருபோதும் மக்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வரவில்லை.2008 மற்றும் 2019ல், 'ஆபரேஷன் தாமரை' மற்றும் பின்கதவு நுழைவு மூலம் அவர்கள் ஆட்சிக்கு வந்தனர். கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ., இந்த முறையும் அதே முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு 136 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது அரசை கவிழ்ப்பது எளிதல்ல. பா.ஜ., ஆட்சிக்கு வர 60 எம்.எல்.ஏ., க்கள் ராஜினாமா செய்ய வேண்டும். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பணத்தால் ஏமாற்றப்பட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.

    No comments